சச்சினுக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருது

தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது,

இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றார். அவுஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2-வது இந்தியர் டெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொரப்ஜி இந்த விருதை பெற்றார். அவுஸ்திரேலிய மந்திரி சைமன் இந்தியா வரும்போது டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு கிளைவ் லாயிடும், 2009-ம் ஆண்டு பிரைன் லாராவும் (மேற்கிந்தி தீவுகள்) இந்த விருதை பெற்றனர்.

டெண்டுல்கர் 190 ரெஸ்ட்டில் 15,533 ஓட்டங்களும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.