கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்திய இலங்கை பெண் சென்னையில் கைது

பிலான தங்க பிஸ்கட்டுகளை கடத்திய இலங்கை பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொழும்பில் இருந்து வந்த அனைத்து விமானங்களையும் அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (01) அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பில் இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கை யாழ்பாணம் பகுதியை சேர்ந்த ஜூரியா மும்தாஜ் (45) என்பவர் சுற்றுலா பயணியாக வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீரவில்லை.

பெண் சுங்க அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவரது கூந்தல் அலங்காரம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பெரிய அளவில் இருந்த கூந்தலை முழுமையாக பார்த்தபோது அதற்குள் 7 தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 700 கிராம். மதிப்பு இந்திய ரூ.23 லட்சம்.

இதையடுத்து அவரை கைது செய்து பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஜூரியா மும்தாஜ், இலங்கைரூ.ல் வேலை இல்லாமல் இருந்துள்ளார். அவரை இலங்கையை சேர்ந்த இருவர் அணுகி, ‘தாங்கள் கொடுக்கும் தங்க பிஸ்கட்டுகளை கூந்தலுக்குள் மறைத்து கொண்டு சென்றால் கண்டுபிடிக்க முடியாது.

சென்னையில் ஒப்படைத்தால் உங்களுக்கு விமான செலவு, இதர செலவுகள் தவிர ரூ.5 ஆயிரம் தருவோம் என பண ஆசை காட்டியுள்ளனர் என்பது தெரிந்தது. அவரிடம் பிஸ்கட்டுகளை கொடுத்து அனுப்பியது யார், சென்னையில் யாரிடம் கொடுக்க இருந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது