கூடங்குள அணுமின் நிலையம் தொடர்பில் நாளைய தினம் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை; அணுசக்தி அதிகார சபை தலைவர் தெரிவிப்பு

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் நாளைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அணுசக்தி அதிகார சபை தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணுத் தாக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துரையாடவுள்ளதாகவும்.

இந்தியாவின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சு மற்றும் மின் கச்தி எரிசக்தி அமைச்சின் பிரதிநிதிகள் இன்று இந்தியா பயணமாவதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தாக்கம் எதுவும் ஏற்ப்பட்டால் இலங்கையினையும் பாதிக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அணுமின் நிலையம் இயங்குவதற்கு கூடங்குளத்தை அண்டியுள்ள மக்களே எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் பல்வேறு போராட்டங்களையும் தற்போதும் முன்னேடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.