கிரேம் ஸ்மித்தின் பின் தலைவராவாரா டிவிலியர்ஸ்?

கிரேம் ஸ்மித்தின் பின் தலைவராவாரா டிவிலியர்ஸ்?

தென்னாபிரிக்க அணியை தலைவர் கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்ற நிலையில் அடுத்த தலைவராக ஏ.பி.டிவிலியர்ஸ் நியமிக்கப்படவேண்டும் என்று முன்னாள் தென்னாபிரிக்க வீரர்கள் கருதுகின்றனர். 

அதற்கு அவர் விக்கெட் காப்பை விடுத்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மார்க் பவுச்சர் கூறுகிறார். 

டெஸ்ட் தொடக்க வீரராக ஸ்மித் இல்லாத நிலையில் குவிண்டன் டீ காக்கை தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் களமிறக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

மகாயா நிடினி என்ன கூறுகிறார் என்றால் டுமினியை ஒருநாள் மற்றும் T20 தலைவராக்கி விட்டு டிவிலியர்ஸை டெஸ்ட் தலைவராக்கலாம் என்கிறார். 

இதேவேளை டுபிளேசியை தலைவராக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் டெஸ்ட் தலைவராக டிவிலியர்ஸ் தொடர விக்கெட் கீப்பிங்கை அவர் விடவேண்டும் என்பது அடிப்படைக் கட்டாயமாக இருந்து வருகிறது.