கால்பந்து நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டணை?

கால்பந்து நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டணை?
கால்பந்தில் அதிக ரசிகர்களை கொண்ட வீரர்கள் என்றால் இப்போதைக்கு அது போர்த்துகல் அணி வீரர் ரொனால்டோவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் தான். மெஸ்ஸி உலக கோப்பை வெல்ல முடியாமல் போனதற்கு உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர். 
 
அதில் இருந்து மீண்டு அவர் தனது கிளப் அணியான பார்சிலோனாவுக்கு நன்றாக விளையாட வேண்டும் என்று இருந்தார். ஆனால் அதற்குள் அவருக்கு புதிய பிரச்சனை வந்து விட்டது.
 
2006-09 ஆண்டு காலகட்டத்தில் தவறான கணக்கை கொடுத்து ஸ்பெயின் அரசிடம் வரி கட்டாமல் மெஸ்ஸி குடும்பம் இருந்து உள்ளது என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 
 
இந்த வழக்கில் இருந்து மெஸ்ஸியை விடுவிக்க கோர்ட் தயாராக இல்லை. மெஸ்ஸி தரப்பில் வாதாடிய வக்கீல் இதற்கும் மெஸ்ஸிக்கும் எந்த சம்மதமும் இல்லை , இவை அனைத்துக்கும் காரணம் மெஸ்ஸியின் தந்தை தான் என கூறினார். 
 
இந்தக் குற்றம் நிருபிக்கப்பட்டால் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 32 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படும். இது அவரது கால்பந்து வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்.