காத்து வாங்கும் கத்தி: ஊதி தள்ளிய 'ஐ' - மாய தோற்றத்தை உருவாக்கும் விஜய் ரசிகர்கள்..!

காத்து வாங்கும் கத்தி: ஊதி தள்ளிய 'ஐ' - மாய தோற்றத்தை உருவாக்கும் விஜய் ரசிகர்கள்..!
தியேட்டர்களில் எத்தனை நாள் படங்கள் ஓடின என்ற காலம் போய், யுடியூப்-ல் எத்தனை பேர் படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களை பார்த்துள்ளனர் என்று காலம் மாறிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் அஞ்சான் டீஸரை அதிகம் பேர் பார்த்ததற்கு, சக்சஸ் பார்ட்டி என அலைப்பரை பண்ணி, கத்து கிட்ட மொத்த வித்தையும் இறக்கி, பேஸ்புக்ல செம்ம மொக்க வாங்குனாரு (சாரி இன்னும் வாங்கிட்டு இருக்காரு) லிங்குசாமி.
 
லிங்குசாமி, சூர்யா வரிசையில் தற்பொழுது விஜய்யும் செம்ம பண்ணு வாங்கியுள்ளார். இரண்டரை வருடமாக ஷங்கர் மற்றும் விக்ரமின் கடின உழைப்பில் உருவான படம் 'ஐ'. இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியின் குறிக்கீடு காரணமாக விஜய்யை இந்த விழாவிற்கு அழைக்கவில்லை. இது விஜய்க்கு சங்கடத்தை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், ஆஸ்கார் மீதும் ஷங்கர் மீதும் கோபத்தை உண்டாகியுள்ளது.
 
ஐ டீசர்  வெளியான அன்று, கத்தி மேக்கிங் வீடியோவை விஜய் தரப்பு அவசர அவசரமாக வெளியிட்டதன் மூலம், இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது என தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக தான் ஐ படம் வெளியாகும் தேதியன்று கத்தி படத்தை வெளியிடவேண்டும் என விஜய் முடிவு செய்தார்.
 
ஐ-யை ஐடியூன்னில் முந்தியது கத்தி. கத்தி-யை கண்டு பயந்து நடுங்கும் ஐ. தீபாவளிக்கு வெளியாகாது ஐ என இணையத்தில் ஒரு மாதமாக செய்திகள் பரவி வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என இந்த விடுமுறை தினத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வே ரிசல்டின் படி 'ஐ' படம் வெளியாகும் நாளில் கத்தி படம் வெளியானால், தோல்வி கத்திக்கு தான் கிடைக்கும் என சர்வேயில் தெளிவாக தெரியவந்துள்ளது.
 
டீசர் தோல்வி:
 
அதாவது, ஐ டீசர் கடந்த மாதம் 15 தேதி வெளியானது. டீசர் வெளியான 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்தனர். தொடர்ந்து படையெடுத்த பார்வையாளர்களினால், 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. அதையடுத்து, ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. இதுவரை எந்த தமிழ் படத்தின் டீசருக்கும் கிடைக்காத அபார வெற்றி என இதை எடுத்துக்கொள்ளலாம். இன்றைய நிலவர படி ‘ஐ’ படத்தின் டீசரை 73,04,026 பேர் பார்த்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 1 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்த எண்ணிக்கை என்பது ஐ படத்தின் டீஸரை அதிகாரபூர்வமாக வெளியிட்ட சோனி மியூஸிக் நிறுவனத்தின் ‘யு டியூப்’ பக்கத்தின் ஹிட்ஸ் மட்டுமே. ‘ஐ’ படத்தின் டீஸரை மேலும் பலர் தங்களின் ‘யுடியூப்’ பக்கம், பேஸ்புக் பக்கம் மற்றும் இணையதளத்தில் தனியாக வெளியிட்டுள்ளனர். இதை கூட்டிக்கழித்து பார்த்தால் 1 கோடியை ஐ தாண்டி விட்டது.
 
கத்தி படத்தின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கத்தியின் டீசர் இணையத்தில் காத்து வாங்குகின்றது. ஜூன் 21-ம் தேதி வெளியான கத்தி ஃபஸ்ட் லுக்-யை இதுவரை 27,53,626 பேர் பார்த்துள்ளனர். ஐ படத்திற்கு போட்டியாக வெளியிட்ட கத்தி படத்தின் மேக்கிங் வீடியோவை 3,85,541 பேர் மட்டுமே பார்த்துள்ளனர். கடந்த மாதம் 18-ம் தேதி வெளியான கத்தி படத்தின் டீசரை 19,87,260 பேர் பார்த்துள்ளனர். இவை அனைத்தையும் கூட்டினால் கூட 51,26,427 பேர் தான் பார்த்துள்ளனர். இதன் மூலம் ஐ படத்துடன் யுடியூபில் போட்டி போட்ட கத்தி படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
 
ஐடியூன் வெற்றி:
 
பொதுவாக பாடல்கள் வெற்றியை ஐடியூன்-யை வைத்து தான் கணிக்கப்படுகிறது. 'தி இந்து' நாளிதழில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியான அன்று ஐ-யை ஐடியூனில் முந்தியது கத்தி என் செய்தி வெளியானது. ஆனால் இன்றைய தேதி நிலவரப்படி ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலே இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மற்ற பாடல்கள் 10 மற்றும் 25  இடத்திற்குள் உள்ளது. ஆனால் முதல் நூறு இடத்தில் ஒரு இடத்தைக் கூட கத்தி படத்தின் பாடல்கள் பிடிக்கவில்லை. சந்தேகம் உள்ளவர்கள் https://www.apple.com/in/itunes/charts/songs/ இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இது ஆப்பிள் தளத்தில் அதிகாரப்பூர்வ பக்கம்.
 
ஐ-யை முந்தியது கத்தி என்ற செய்தி விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கிய மாய தோற்றம் மட்டுமே.
 
மக்களின் எதிர்பார்ப்பு:
 
ஐ படத்தை தமிழகம் மட்டும் அல்லாமல் உலகமே திரும்பி பார்த்துள்ளது. காரணம் அர்னால்ட் என்ற ஹாலிவுட் ஜாம்பவன் ஐ தமிழ் ஆடியோ விழாவில் கலந்துகொண்டதால். மேலும் ஜாக்கி ஜான் என்ற மற்றொரு ஜாம்பவான் தெலுங்கு ஆடியோ விழாவில் கலந்துகொள்ள உள்ளதால்.
 
விக்ரம் மற்றும் சங்கரின் கடின உழைப்பில் தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது மக்களின் பெரும் பாலோனோர் கருத்து. இது தீபாவளி அன்று கட்டாயம் உறுதியாகும். ஐ ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையாக அமையும் என பல தரப்பு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் கத்தி படத்தை எப்படியெல்லாம் தடுக்கலாம் என ஒரு பெரிய கூட்டமே காத்துள்ளது. அந்த கூட்டம் தமிழ் அமைப்புகள் மட்டும் அல்ல, இன்னும் மிகப்பெரிய அளவில் தடைபோட ஒரு பெரிய திட்டமே அரங்கேறி வருகின்றது. அதை அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம். விஜய் ரசிகர்களை தவிர கத்தி படத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை மேற்கூறிய விசயங்களிலேயே தெரிந்துகொள்ளலாம். மேலும் பெரும்பாலான மக்கள் ஐ படத்தை முதலில் காணவே விரும்புகின்றனர்.
 
தீபாவளிக்கு ஐ உறுதி:
 
ஐ படம் தீபாவளிக்கு வராது என நேற்று வரை செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று ஆஸ்கார் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் படி, ஐ குறித்த தேதியில் தீபாவளிக்கு வரும். நாங்கள் யாருக்கும் அஞ்சவில்லை, வதந்திகளை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகமே. காரணம் ஒரு விசயத்தில் விஜய், அஸ்காரிடம் வசமாக லாக் ஆகியுள்ளார். அது என்ன என்ற தகவலை, எங்கள் நிருபர்கள் சேகரித்து வருகின்றனர். அடுத்த பதிவில் தெளிவாக வெளியிடுகிறோம்.
 
நிலைமை இப்படி இருக்க கத்தி தீபாவளிக்கு ஒருவேளை வெளிவந்தால் தலைப்பை மீண்டும் ஒரு முறை படியுங்களேன்....