கனடா வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி!

கனடாவின் QEWதேசிய நெடுஞ்சாலை 427ல் கடந்த 5ம் திகதி ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்திற்கு காரணமான எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.