கனடாவிலிருந்து 70 வயதான இலங்கை தமிழ் பெண் நாடுகடத்தப்பட்டார்

எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு விமானமொன்றில் ஏற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் கனேடிய எல்லை சேவைகள் முகவரக அதிகாரியொருவர், தாதியொருவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

தமக்கு மோசமான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கனேடிய மகளும் பேத்தியும் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு அனுசரணை வழங்குவதற்கு பதிலாக அகதி அந்தஸ்து கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்னர்.

 'அவர் அங்கு திரும்பிச் செல்லலாம். ஆனால், அங்கு அங்கு அவருக்கு வேறு உறவினர்களோ, நெருக்கமான நண்பர்களோ இல்லை' என அப்பெண் நாடு கடத்தப்படுவதற்கு முன் சிபிசி தொலைக்காட்சிக்கு அப்பெண்ணின் மகளான சந்திராதேவி உத்திரகுமாரன் கூறினார்.

'இப்படி உங்கள் குடும்பத்திற்கு நடப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவருக்கு அனுசரணை வழங்க எமக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். அங்குள்ள சூழ்நிலை தெரியாமல் என அவரின் பேத்தியான தாட்ஸா உத்திரகுமாரன் கூறினார்.

அப்பெண்ணின் பிள்ளைகளில் இருவர் கனடாவிலும் மேலும் இருவர் நோர்வேயிலும் வசிக்கின்றனர். அப்பெண்ணுக்கு நோர்வேயில் நிரந்தர வதிவிடம் இருப்பதாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. எனினும் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த  வதிவிட ஸ்ரிக்கர் திகதி காலாவதியாகியிருந்தது எனவும் அச்சபை ஒப்புக்கொண்டுள்ளது.


கனடாவிலுள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இணைய விரும்புவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை கடந்த வருடம் கனடா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளைஇ குடும்ப அங்கத்தவர்களை சந்திக்கவருபவர்களுக்கு பத்து வருடங்களுக்கான புதிய சுப்பர் விஸா திட்டமொன்றை பிரஜாவுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி அறிவித்தார். இதன்படி ஒருவர் ஒருதடவையில்  இருவருட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம். இத்திட்டத்தின்கீழ் தமது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டியை அழைக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 17இ000 டொலர் வருமானத்தை கொண்டிருப்பதுடன் தனியார் காப்புறுதியையும் பெற வேண்டும்