கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது அயர்லாந்து

பங்காளதேஷில் நடைபெற்று வரும் 5 வது உலகக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வே அயர்லாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது. 

அதன் படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 59 ஓட்டங்கள் எடுத்தார். 

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டிர்லிங் 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட 60 ஓட்டங்கள் குவித்தார். போட்டர்பீல்டு 31 ஓட்டங்கள் எடுத்தார். 

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் ஜிம்பாப்வே பக்கம் திரும்பியது. ஆனால் பின் வரிசை வீரர்கள் பொறுப்புடன் ஆடியதால் ஆட்டம் அயர்லாந்து வசமானது. கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து த்ரில் வெற்றியை ருசித்தது. 

ஜிம்பாப்வே தரப்பில் பன்யாங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அயர்லாந்து அணியின் போட்டர் பீல்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.