ஒபாமாவுக்கு விஷக் கடிதம் அனுப்பியவர் 25 ஆண்டுகள் சிறையில்

ஒபாமாவுக்கு விஷக் கடிதம் அனுப்பியவர் 25 ஆண்டுகள் சிறையில்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்தவர் ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41). இவர் அந்த நாட்டு ஜனாதிபதி ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்’ என்ற இரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பினார். 

ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 

இதையொட்டி கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் எவரெட் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என ஜனவரி மாதம் அறிவித்தது. 

இந்த நிலையில் நேற்று அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கிடையே இந்த சதி செயலில் ஈடுபட்டதாக எல்வில் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.