ஐ.பி.எல் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் பங்காளதேஷிலும் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 16-ம் திகதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சார்ஜாவில் 17-ம் திகதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. 

18-ம் திகதி அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 

போட்டிக்கான அட்டவணை பின்வருமாறு: 

ஏப்.18. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) 

ஏப்.19. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - டெல்லி டேர்வில்ஸ் (துபாய்) 

ஏப்.20. ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஷார்ஜா) 

ஏப்.21. சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்வில்ஸ் (அபுதாபி) 

ஏப்.22. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா) 

ஏப்.23. ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (துபாய்) 

ஏப்.24. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (ஷார்ஜா) 

ஏப்.25. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி டேர்வில்ஸ் (துபாய்), சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (துபாய்) 

ஏப்.26. ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி), கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (அபுதாபி) 

ஏப்.27. டெல்லி டேர்வில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர்கிங்ஸ் (ஷார்ஜா) 

ஏப்.28. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (துபாய்) 

ஏப்.29. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி) 

ஏப்.30. மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்)