உலக கிண்ண கால்ப முதல் சுற்றில் பிரேசிலுக்கு வெற்றி வாய்ப்பு!

உலக கிண்ண கால்பந்து குரூப் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் 2ம் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டாம் சுற்றில் முன்னாள் சாம்பியன்களிடம் இருந்து, பிரேசில் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. 

உலக கிண்ண கால் பந்து குரூப் ஏ பிரிவில் குரோ ஷியா, மெக்சிகோ, கேமரூன் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணியும் இடம் பெற்றுள்ளது. நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி சமீபத்தில் விளையாடிய 14 சர்வதேச போட்டிகளில் 13ல் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. 

தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று உலக கிண்ணத்துகுள் நுழைந்துள்ள குரோஷியா, மெக்சிகோ அணிகள் பிரேசிலில் தங்களது பார்மை மீண்டும் பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளன. கேமரூன் அணியோ தங்களது தாக்குதல் வீரர் சாமுவேல் எட் டோவை நம்பியே உள்ளது. 

உலக கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான பிரேசில், குரூப் பிரிவில் இருந்து நாக் அவுட் பிரிவுக்கு முன்னேற எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாது எனத் தெரிகிறது. 1970ல் இருந்து நடந்த உலக கிண்ணத்தில் பிரேசில் அணி ஒவ்வொரு முறையும் குரூப் நிலையை கடந்து இரண்டாம் சுற்றை அடைந்துள்ளது. 

இந்த முறையும் சற்று பலவீனமான அணிகளே இடம் பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் எந்த வித சிரமமுமின்றி பிரேசில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்கின்றனர் கால்பந்து விமர்சகர்கள். கடந்த ஆண்டில் கான்பிடரேஷன் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில உள்ள பிரேசில் அணியினருக்கு சொந்த நாட்டு ரசிகர்களின் கூக்குரல்கள் மேலும் ஊக்கத்தைத் தரும். குரூப் நிலையில் உள்ள அனைத்து எதிரணிகளையும் சமீபத்தில் வென்றுள்ள பிரேசில் அணிக்கு கடந்த இரண்டு உலக கிண்ண போட்டிகளில் காலிறுதியில் வெளியேறியது போன்ற நிலை இந்த முறை நிச்சயம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. 

இந்த குரூப்பில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாலும், 2ம் சுற்றில் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும். குரூப் ஏ யில் இருந்து முன்னேறும் அணிகளில் ஒன்று, குரூப் பி யில் முதல் இரண்டு இரண்டு இடங்களை பிடிக் கும் அணிகளில் ஒன்றோடு 2ம் சுற்றில் மோத வேண்டியிருக்கும். 

குரூப் பி யில் பலம் வாய்ந்த அணிகளான நடப்பு சாம்பியன் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது தவிர முதல் சுற்றில் குரூப் ஏ யில் வெற்றி பெறும் மற்றொரு அணி, குரூப் டி யில் வெற்றி பெறும் அணி ஒன்றுடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியிருக்கும். இந்த அணியில் ஜாம்பவான் அணிகளான முன்னாள் உலக சாம்பியன்கள் உருகுவே, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் கோஸ்டாரிகா ஆகியவை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.