இலங்கைக்கு எதிரான போட்டியில் 32 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

இருபத்துக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.