இறுதிப் போட்டிக்கு மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக்கழகம் தெரிவு

நியூ ஸடார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மானிப்பாய் பரிஷ விளையாட்டுக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 16 விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடத்தி வந்தது.

இப்போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டம் நேற்;று சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக் கழகத்திற்கும், சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக் கழக அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.
இதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் 39, மதுசன் 39, ஜெனோசன் 29, வதுசனன் 27 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக்கழகம் சார்பாக வினோத் 3 விக்கெட்களைச் கைப்பற்றினார்.

175 என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக்கழகம் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை இலகுவில் அடைந்தது.

இவ்வனியின் சார்பில், ஜெயதீபன் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் நிதரசன் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் கொக்குவில் மத்திய சனசமூக விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சென்ரல் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.

இதில் வெற்றிபெறும் அணி மானிப்பாய் பரிஷ; அணியுடன் இறுதி ஆட்டத்தில் மோதும்.