இனியா வீட்டில் கொள்ளையிட்டது அவரது அக்காவின் காதலரே

இனியா வீட்டில் கொள்ளையிட்டது அவரது அக்காவின் காதலரே

தமிழில் வாகை சூடவா, யுத்தம் செய், மவுன குரு, நான் சிவப்பு மனிதன் படங்களில் நடித்தவர் நடிகை இனியா. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் கரமணை பகுதியில் வசித்து வருகிறார். 

இனியாவின் அக்கா ஸ்வாதி, மலையாள தொலைக்காட்சி நடித்து வருகிறார். ஸ்வாதி திருவனந்தபுரம் பாற்றுரைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் ஷாபின் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

ஷாபின் சாதாரண கடை ஊழியர் என்பதால் இனியாவின் குடும்பதில் காதலுக்கு எதிர்ப்பு இருந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக சம்மதித்து திருமணமும நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் திருவனந்தபுரம் 5 நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்காக வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையும் 5 இலட்சம் ரொக்க பணமும் மர்ம நபர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது. 

இதுகுறித்து பொலிசில் புகார் செய்தார்கள். பொலிஸ் விசாரணையில் இனியா வீடு புகுந்து கொள்ளை அடித்தது அவரது அக்கா ஸ்வாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைதான் என்று தெரியவந்துள்ளது. 

"ஸ்வாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஷாபின் அந்த குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளார். வீட்டு சாவியையும் அவரிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த சாவியை வைத்து டூப்ளிகேட் சாவி செய்து நண்பர்களை கொண்டு கொள்ளையடித்துள்ளார். அதனை பிரித்து எடுத்துக் கொண்டு தான் அப்பாவி போல இருந்திருக்கிறார்" என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.