இந்திய உளவுத் துறையில் சிங்களம் தெரிந்தவர்களுக்கு வேலை

இந்திய மத்திய உளவுத்துறையான ரா-இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே ரா உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களம் (இலங்கை), பாஸ்தோ (ஆப்கான்), தாரி (ஆப்கான் மற்றும் ஈரானில் சில பகுதிகள்), மியான்மாரி (மியான்மார்), மான்டரின், கான்டனீஸ் (சீனா) ஆகிய மொழிகளை அறிந்தவர்கள் ரா அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என தெரியவருகிறது.

இவர்களில் சிங்களம் தெரிந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிலும், மற்றைய மொழி அறிந்த வர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் நியமனம் செய்யப் படவுள்ளனர் என அறிய வந்துள்ளது.