இந்தியாவை அடித்து துவைத்து அவுஸ்திரேலியா அபார வெற்றி

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இன்றை சுப்பர் 8 சுற்றின் மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பெரிதாக சோபிக்காததால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து அவர்களால் 140 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதில் இர்பான் பதான் மாத்திரம் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு 141 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிக்ஸ்ர், பவுண்டரி மழை பொழிந்து பதம் பார்த்தனர்.

அவுஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் 01 விக்கெடினை மாத்திரம் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வோர்னர் 63 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 03 சிக்ஸர்கள் அடங்கும். ஷேன் வொட்சன் 72 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.