இந்தியாவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை 53% உயரும்

புதுடெல்லி: கிரெடிட் சுசே அமைப்பு, உலக கோடீஸ்வரர்கள் பற்றிய ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் 2017ம் ஆண்டில், கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் தொடர் ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கும். அமெரிக்க கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி யே 69 லட்சம் பேராக இருப்பார்கள். அதேசமயம் ஐரோப்பாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி யே 54 லட்சமாக இருக்கும்.சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இப்போதுள்ள எண்ணிக்கையை விட 2 மடங்காக உயர்ந்து சுமார் 20 லட்சம் பேர் இருப்பார்கள். இந்தியாவை பொருத்த வரை யில், தற்போது கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரம் பேர். ரூ.500 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 700 பேர். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வரும் 5 ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரிக்கும். அதாவது கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 84,000 பேர் அதிகரிப்பார்கள்.