இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வருகை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் பொருட்டு அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது.

இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப் பயணத்தின்போது, 4 டெஸ்ட் மற்றும் இரண்டு ருவென்ரி ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ் இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 15ம் திகதி அகமதாபாத்தில் ஆரம்பமாகிறது.

டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் திகதியுடன் நிறைவுபெற்ற தொடர்ந்து இரண்டு ருவென்ரி ருவென்ரி போட்டி டிசம்பர் 20 மற்றும் 22ம் திகதிகளில் நடைபெறும்.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இங்கிலாந்து அணி மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் எனவும் இங்கிலாந்து அணி இந்திய ‘ஏ’ அணியுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு ரெய்னா அணித்தலைவராக உள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு யூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது 4 டெஸ்டிலும் தோற்று 0 க்கு 4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இதற்கு பதிலடியாக இந்திய அணி தற்போது 4 டெஸ்டிலும் வெல்லுமா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:
அலஸ்டயர் குக் (அணித்தலைவர்), இயன்பெல், டிராட், கெவின் பீட்டர்சன், மார்கன், பேர்ஸ்டோவ், பிரையர் ஆனியன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், காம்டன், ஆண்டர்சன், பிரெஸ்னென், சுவான், சமீத் பட்டேல், பனேசர், ஸ்டீவன் பின், ஜோரூட்.