இணையதளத்தில் இலங்கையின் வாக்காளர் பதிவேடு

இணையதளத்தில் இலங்கையின் வாக்காளர் பதிவேடு

 

இலங்கையின் வாக்காளர் பதிவேடு முதல் தடவையாக இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

 


2011 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடு, தேர்தல்கள் ஆணையாளரினால் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.

slelections.gov.lk. என்ற இணையதளத்தில் எந்தவொரு வாக்காளரும் தமது தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழியில் வாக்காளர் பதிவேட்டு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.