ஆஸி.யில் புதிய சட்டங்களுக்கு எதிராக இன்று மாபெரும் ஆர்ப்பட்டம்

கம்போடிய ஒப்பந்தம் மற்றும் தற்போது அறிமுகப்படுத்தவிருக்கும் தற்காலிக விசாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது .
 
இந்த ஆர்ப்பாட்டத்தை அகதிகள் அதிரடி கூட்டணி ஏற்ப்பாடு செய்திருந்தது. 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இயன் ரிண்டோல்,
 
தற்போது அகதிகளின் நிலைமை மிகவும் மோசமான முறயில் உள்ளது நவ்ரு ,மனுஸ் ,பப்புவநிவ்ஹினிய போன்ற தீவுகளில் வைக்கப் பட்டுள்ளவர்கள் அநேகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அதே போன்று கம்போடியா அகதிகளுக்கு சிறந்த நாடு அல்ல. கம்போடியாவில் இருந்து அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு வருகின்றனர்.
 
அவுஸ்ரேலியா அகதிகளை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் எதிர் கட்சிகள் அதரவு வழங்காது அந்தவகையில் இந்த முனைப்பு தோல்வியை  ஏற்படுத்தும்.
 
இந்த நடவடிக்கைக்கு  ஒரு போதும் செனட் சபை அங்கீகாரம் வழங்காது என்பது எமக்குத் தெரியும்.
 
அகதிகளை வைத்து அரசியல் நடத்துவதை விட்டு விட்டு மிக விரைவில் அகதிகளுக்கு சிறந்த தொரு தீர்வினை வழங்க வேண்டும்.
 
அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரியவர்களுக்கு விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்க வேண்டும். இந்த நடைமுறையை கண்டித்து தொடர்ந்தும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தார் .
 
இந்த ஆர்ப்பட்டமனது சிட்னி குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.