ஆப்கான் 7 விக்கெட்டாலும் பங்காளதேஷ் 8 விக்கெட்டாலும் வெற்றி

ஆப்கான் 7 விக்கெட்டாலும் பங்காளதேஷ் 8 விக்கெட்டாலும் வெற்றி

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று பங்காளதேஷில் நடைபெற்று வருகிறது. 

இதில் 8 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஆங்காங் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்றுக்கு தகுதி பெறும். 

நேற்று நடந்த ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டில் ஆங்காங்கையும், பங்காளதேஷ் 8 விக்கெட்டில் நேபாளத்தையும் தோற்கடித்தன. பங்காளதேஷ் பெற்ற 2–வது வெற்றியாகும். ஆங்காங் 2 தோல்வியை தழுவி வெளியேற்றப்பட்டது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் உள்ள அயர்லாந்து– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (இரவு 7 மணி), நெதர்லாந்து– ஜிம்பாப்வே (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. 

அயர்லாந்து தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை கடைசி பந்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி 2–வது வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்றது. 

ஜிம்பாப்வே அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்திடம் தோற்றதால் இன்றைய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள் ளது. நெதர்லாந்திடம் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும்.