அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம்

 

இவ்வாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் பட்டமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

 


ஆடவர் மற்றும் மகளிருக்கான முதல்சுற்றுப் போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

தரப்படுதலில் முதலிடத்திலுள்ள ரொஜர் பெடரர், நொவெக் ஜொக்கோவிச், அன்டி மரே போன்ற முன்னணி வீரர்கள் இந்த போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

எனினும் உபாதை காரணமாக ஸ்பெய்னின் முன்னணி வீரர் ரபெயல் நடால் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒலிம்பிக் விழாவில் தங்க பதக்கம் வெற்ற உற்சாகத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

மீண்டும் தரப்படுதலில் முதலிடத்தை பெறும் இலக்குடன் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா இந்த போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.