அமெரிக்க உளவாளி பிரேசிலில் தஞ்சம்?

அமெரிக்க உளவாளி பிரேசிலில் தஞ்சம்?

அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்நோடன். இவர் அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே தண்டனையில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். 

அவரை தேடப்படும் குற்றவாளி ஆக அமெரிக்க அறிவித்துள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் அவர் அடைக்கலத்துக்கான காலம் வருகிற ஆகஸ்டுடன் முடிகிறது. 

எனவே, அவர் பிரேசிலில் தஞ்சம் அடைகிறார். அதற்காக இவர் அந்நாட்டிடம் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த தகவலை டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

அதில், "நான் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் கேட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு பிரேசில் மிகவும் பிடித்தமான நாடாகும். அதை மனதார நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

ஆனால், இதை பிரேசில் வெளியுறவு மந்திரி மறுத்துள்ளார். ஸ்நோடனிடம் இருந்து இதுபோன்ற விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.