5 வருடங்கள் படகில் உலகை சுற்றும் தம்பதி

17 மாத வயதான தமது குழந்தையுடன் ஐந்து வருடகாலம் படகில் உலகை சுற்றிவருவதற்கு தம்பதியொன்று திட்டமிட்டுள்ளது. இப்பயணத்திற்காக 12 மீற்றர் நீளமான படகொன்றை வாங்குவதற்காக தமது சொத்துக்கள் முழுதையும் இத்தம்பதி விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியை சேர்ந்த சிகையலங்கார கலைஞரான ஜோஸப் டெல்லா வோல்பேவும் (45) குரோஷியாவைச் சேர்ந்த மார்ட்டினா டெல்லா வோல்பேவுமே (32) இவ்வாறு குழந்தையுடன் படகுமூலம் உலகை சுற்றிவரவுள்ளனர்.
இக்குழந்தை பாடசாலைக்குச் செல்லும் வயதை அடையும் முன் தமது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'சிலர் எம்மை விமர்சிப்பார்கள். ஆனால் நாம் அனைத்தையும் கவனமாக திட்டமிட்டுள்ளோம்' என கிறிஸ்டினா கூறுகிறார்.
'எமது மகள் அதிக நேரம் எம்முடனேயே இருக்கப்போகிறாள். அவளின் வாழ்க்கையில் இந்த முக்கியமான நேரத்தில் அவளுக்காக  பல புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப்பொருட்களை நாம் எடுத்துச்  செல்வோம். இதைவிட வேறென்ன அவளுக்குத் தேவை' என கிறிஸ்டினா கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தாலியிலிருந்து புறப்பட்டுள்ள இத்தம்பதி மத்திய தரைக்கடல் வழியாக அத்திலாந்திக் சமுத்திரத்தை அடைந்து அதன்பின் பசுபிக் சமுத்திரத்திற்கூடாக அவுஸ்திரேலியாவை அடைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

நான் கடலுக்கு அருகில் பிறந்தேன். எப்போதும் கடலை நேசிக்கின்றேன். எனது கணவரும் அப்படித்தான். கடலானது சுதந்திரத்தின் சின்னமாகவுள்ளது. தரையில் அதை ஒருபோதும் காண முடியாது. எனவே எமது மக்கள் பாடசாலை செல்ல ஆரம்பிப்பதற்குமுன்னர் நாம் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறோம்' என கிறிஸ்டினா மேலும் தெரிவித்துள்ளார்.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka