134 கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அவர்களால் வழங்கிவைப்பு.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 134 கடற்றொழிலாளர்களுக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 
 குறித்த பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அறத்தி நகர் கோவில்வயல் ஆகிய  கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட 134 கடற்றொழிலாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை (18) அன்று மீன்பிடிப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கிவைத்தார். அறத்திநகரில் 45 கடற்றொழிலாளர்களுக்கு தலா 45ஆயிரம் பெறுமதியான  படகு வலைகள் உள்ளிட்ட 21 தொகுதிகளும் கோவில் வயலில் சுமார் பதினேழரை இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை  89 கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டன. யுஎன்எச்சிஆர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா நிறுவனத்தினரால் நடைமுறைபப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டத்தின் அடிப்படையிலேயே இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்வுகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன் சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் பிரதிநிதி ஜெனிவில் கொன்ரெசோ கிளிநொச்சி  வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேல் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் உறுப்பினர் தியாகராஜா மற்றும் அன்ரன் அன்பழகன் ஆகியோருடன் சேவாலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் பிரதிநிதிகளும்; மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka