பிணை வழங்கியதை தவறாக புரிந்து கொண்ட அ.தி.மு.கவினர்

பிணை வழங்கியதை தவறாக புரிந்து கொண்ட அ.தி.மு.கவினர்

ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கப்பட்டுள்ள போதும் அவரால் தேர்தலில் போட்டியிடவோ,  முதல்வர் பதவியை தொடரவோ முடியாதுள்ளது. 

உச்சநீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள  தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதே தவிர்ந்து அவர் 'குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. 

எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை இவரால் முதல்வர் பதவியை வகிக்க முடியாது என்பதுடன், தேர்தலில் போட்டியிடவும் முடியாது. இதனால் தான்  ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைத்து பிணை அளிக்கப்பட்டுள்ளது. 

ஏனெனில் தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்படி பிணையில் வெளியே போக முடியும் என்ற சின்ன சட்ட சிக்கல் உள்ளதால், தண்டனையை ரத்து செய்து பிணை வழங்குவதாக அறிவித்துள்ளனர் நீதிபதிகள். ஆனால் தண்டனை ரத்து என்பதை சிலர், குறிப்பாக ஆளும்கட்சியினர் தவறாக புரிந்துகொண்டிருப்பது அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் மூலமும். முக்கிய பிரமுகர்கள் ஊடகங்களிற்கு வழங்கும் பேட்டிகளிலும் தவறான புரிதலுடனே பேசிவருகின்றனர். 

என்பது புலப்படுகின்றது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடிந்து ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லும்வரை அவர் குற்றவாளி என்ற அவப்பெயருடனே இருப்பார். 

குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தால் மட்டுமே அவரால் தேர்தலில் போட்டியிட முடியும். சில வேளைகளில் அவரை குற்றவாளி என அறிவித்து கீழ்நீதிமன்ற தீர்ப்பை உயர் நிதிமன்றம் பற்றிப்பிடித்தால் ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றம் செல்லமுடியும்.  

அங்கு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று கூறி ஜெயலலிதாவை விடுவித்தால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெறுவார். எனவே இந்த விசாரணைகள் முடியும்வரை, 

ஜெயலலிதா எந்த பதவிக்கும் வர முடியாது, தேர்தலிலும் போட்டியிட முடியாது. இப்போது விடுதலையாகி ஜெயலலிதா சென்னை வந்தாலும் அவரால் முழு நேர அரசியல்வாதியாக எதிலும் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.