ஜெ. க்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு

ஜெ. க்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறைத்தண்டனை பெற்றுவரும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.   

ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த வரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை விசாரிக்க விடுமுறைகால நீதிபதி ரத்னகலா மறுத்துவிட்டார். இந்த வழக்கு முக்கியத்துவமானதாக இருப்பதால் வழக்கமான ஐகோர்ட் அமர்வு விசாரணை செய்யும் என்று அவர் உத்தரவிட்டார்.   

தசரா விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் கர்நாடக ஐகோர்ட்டு நாளை திறக்கப்படுகிறது. கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

ஜாமீன் கிடைக்க வாய்ப்பு   இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா "ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.     

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தான் அரசு சார்பில் ஆஜராகி வாதாடியதாகவும் தனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்ததால் வேறு வழியில்லாமல் அந்த பதவியில் இருந்து தான் விலகியதாகவும் கூறிய ஆச்சார்யா  இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. 

அதன்படி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.   வழக்கறிஞர் ஆச்சார்யா, பவானி சிங் அவர்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு சார்பில் இந்த வழக்கில் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.