சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!
முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும். சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக்.
 
பொதுவாக ஃபேஸ் பேக்கில் நிறைய உள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை எளிதில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் ஃபேஸ் பேக்குகள் செய்வது என்பது மிகவும் எளிது.
 
எனவே, விரைவில் முதுமை தோற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில், அத்தகைய முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை போக்குவதற்கான ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும். அந்த ஃபேஸ் பேக்குகளில் சரும சுருக்கத்தைப் போக்கும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்…
 
• முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் படிப்படியாக நீங்கும்.
 
• முல்தானி மெட்டியை முட்டை, கிளிசரின் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை 10 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
 
• பாலில் முல்தானி மெட்டி பொடியை கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் பால் கொண்டு 15 நிமிடம் லேசாக மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் இறுக்கமடையும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
 
• அரிசி மாவில், ஆலிவ் ஆயில் மற்றம் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும சுருக்கங்கள் நீங்கும்.
 
• தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும இறுக்கமடைந்து முதுமை தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.
 
• அவகேடோவை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரை வைத்து கழுவினால், அதில் உள்ள அவகேடோ கொலாஜனை அதிகம் உற்பத்தி செய்து, இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும்.