குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக பெண் குழந்தை பிறப்பு

குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக பெண் குழந்தை பிறப்பு
குடும்­ப­மொன்றில் 101 ஆண்­டு­க­ளுக்கு பின் முதல் தட­வை­யாக பெண்­ கு­ழந்­தை­யொன்று பிறந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
 
 
டெவொன் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜெரேமி சில்­வெர்டன் (43 வயது) மற்றும் அவ­ரது மனைவி டானி­யலே அன்ட்ரூஸ் (36 வயது) ஆகி­யோ­ருக்கே இவ்­வாறு பெண்­ கு­ழந்­தை­யொன்று பிறந்­துள்­ளது. பிறந்த குழந்­தைக்கு பொப்பி என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.
 
சில்­வெர்டனின் குடும்­பத்தில் 1913 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆண் குழந்­தைகள் மட்­டுமே பிறந்­துள்­ளனர். இவ்­வாறு 4 தலை­மு­றை­க­ளாக ஆண் வாரி­சு­களை மட்­டுமே கொண்ட குடும்­பத்தில் பெண் குழந்­தை­யொன்று முதல் தட­வை­யாக பிறப்­பது 10,000 பிறப்­பு­க­ளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.