வேலணை பிரதேசத்திற்கு குடிநீர் விநியோகிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுப்பு!

துரிதநீர் விநியோகத்திட்டத்தின் கிழ் வேலணை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை வேலணை பிரதேசசபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா (போல்) தொடக்கி வைத்தார்.

இன்றைய தினம் (20) துறையூர் விநாசித்தம்பி வீதிக்கான குடிநீர் விநியோகத்தின் ஆரம்பக்கட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 75 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடையவுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் காரணமாகவே இக் குடிநீர் விநியோகத் திட்டம் செயற்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka