விமானத்தில் நீச்சலுடை நடனம் நடத்தியமைக்காக விமான நிறுவனத்திற்கு அபராதம்

 

விமானப் பயணத்தின்   நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும்  கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
 
குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
 
இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத்த பயணிகள் சமூகவலையமைப்புகளில் வெளியிட்டு விட்டனர்.
 
மேலும் விமான சேவையும் அதனை யூடியூபில் வெளியிட்டுள்ளது.
 
இவ்விடயம் வியட்நாம் நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையினருக்குத் தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்தே விமான சேவை மீது அபராதம் விதித்துள்ளனர்.
 
வியட்நாமில் முதல்முறையாக சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான விமான சேவையே 'வியட் ஜெட் எயார்' என்பது குறிப்பிடத்தக்கது.

 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka