வன்னியில் கடமையாற்றிய 104 ஆசிரியர்களும் இடமாற்றத்திற்கு தயார்

வன்னியில் கடமையாற்றிய 104 ஆசிரியர்களும் இடமாற்றத்திற்கு தயார்

மாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களுடன் வன்னியில் கடமை ஆற்றிய 104  ஆசிரியர்களும் இடமாற்றத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலாளர் லெஸ்லி தெரிவித்தார்.

வன்னி ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் 104 வன்னி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் 104 ஆசிரியர்களுக்கும் மாகாண கல்வி திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், 5 கல்வி வலயங்களில்; உள்ள பாடசாலைகளுக்கு வலயக் கல்வி ஊடாக ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு கடமையாற்றச் செல்வார்கள் எனவும்; இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் குறிப்பட்டார்.

குறித்த 140 ஆசிரியர்களும் யுத்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு  மத்தியில் வன்னியில் கடமை ஆற்றியவர்கள். அவர்களின் சேவைகள் மதிக்கப்பட வேண்டும்.  தமது வசதிக்கு ஏற்ப பாடசாலைகளை தெரிவுசெய்து சேவை ஆற்றுவதற்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இடமாற்றம் ஒரு வரப்பிரசாதம் எனவும் அவர் கூறினார்.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka