வங்கியின் அடகு நகைகள் கையாடல்செய்த ஊழியருக்கு விளக்கமறியல்

வங்கியின் அடகு நகைகள் கையாடல்செய்த ஊழியருக்கு விளக்கமறியல்

மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர், கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கையாடல் செய்துள்ளதாக முறையிடப்பட்டதை அடுத்து குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஓகஸ்ட் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கிளையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரினால் அடைகுக்காக வைக்கப்பட்ட சங்கிலி 4, நெக்கிளஸ் 2, காப்பு 1, கைச்செயின் 1 என்பன அவரிடமிருந்து மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka