யாழில் 4 பேர் தீ விபத்துக்களால் மரணம் .

யாழில் 4 பேர் தீ விபத்துக்களால் மரணம் .

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தீயில் கருகிய நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மரணப் பதிவேட்டு புள்ளிவிபரத் தரவுகள் தெரிவித்துள்ளன.

தீயினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 8 பேர் கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. மரணமடைந்தவர்களில்  3 பெண்கள் அடங்குகின்றனர்.

குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே இந்த தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவு மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka