யாழில் மின்விநியோகத் தடை

யாழில் மின்விநியோகத் தடை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காகவும் உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் யாழில் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ்.பிராந்திய மின்சார சபை இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் மல்லாகம் ஒரு பகுதி, அளவெட்டி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான் ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, காக்கைதீவு, மீனாட்ச்சிபுரம், பாசையூர், கொழும்புத்துறை, இயக்கச்சி, பளை, மாசார், புதுக்காடு, மிருசுவில், உசன், மீசாலை, மருதங்கேணி ஆகிய இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

எதிர்வரும் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ் மாநகரசபைப்பகுதி, ஸ்ரான்லி வீதி, மரதனார்மடத்தின் ஒரு பகுதி, இணுவில், கோண்டாவிலில் ஒரு பகுதி, தாவடி, கொக்குவில் ஒரு பகுதி, இயக்கச்சி, பளை, மாசார், புதுக்காடு, மிருசுவில், உசன், மீசாலை, மருதங்கேணி ஆகிய இடங்களிலும்; மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka