மீள்குடியேற்ற மக்களுடன் பிரிட்டன் எம்.பி.க்கள்...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினர் இன்று  அரியாலைப் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேறியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்திற்கு விஜயம் செய்த குழுவினர் இன்று மாலை அரியாலை, வசந்தபுரம், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை முறை, மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இவர்கள் ஆராய்ந்துள்ளதுடன் மக்களை நேரில் சந்தித்து மக்கள் எதிர்நோக்கி வருகின்ற
பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தையும் அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka