மலசலகூட குழியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு; துணியால் சுற்றி வீசியதாக தாய் வாக்குமூலம்

தெல்தெனிய பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள மலசலகூட குழியொன்றிலிருந்து பிறந்து 10 நாட்களேயான சிசுவொன்றின் சடலத்தினை தெல்தெனிய பொலிஸார் இன்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே மேற்படி சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து சிசுவின் தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி தான் இந்த சிசுவை பிரசவித்ததாகவும் அதன்பின்னர் அச்சிசுவை துணியால் சுற்றி வீசியதாகவும் கைது செய்யப்பட்ட தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka