மண் குவியல் சரிந்ததில் 6 படையினர் பலி

படை வீரர்கள் மீது மண் குவியலொன்று சரிந்து வீழ்ந்தமையினால் தியதலாவ இராணுவ முகாமிலுள்ள ஆறு படையினர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் இரண்டு படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இராணுவத்தின் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல்களான ஜயலத், விஜேபால, தசநாயக்க, ஏகநாயக்க மற்றும் இராணுவ வீரர்களான தென்னகோன், பண்டாரநாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது இராணுவ அதிகாரிகளான சரத் மற்றும் ஜயவர்தன ஆகியோரே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

விடுமுறை விடுதியொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மண் குவியல் சரிந்து விழுந்துள்ளது என்று இராணுவ பிரிவு தகவல்கள் தெரிவித்தன.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka