படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 69 பேர் கைது

படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 69 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

'ஆஷா துவ' எனும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று,  நீர்கொழும்புக்கு அருகில் வைத்து கடற்படையின் அதிவேக படகுகளினால்; தடுக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது இவர்கள் கைது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 தமிழர்கள் 19 சிங்களவர்கள் 2 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். நீர்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், விஸ்வமடு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என அறிவிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka