தொங்கியவாறு சடலமாக மீட்பு!- யாழ். கோண்டாவிலில் சம்பவம்

யாழ். கோண்டாவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நவரட்ணராஜா வீதி, கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் 42 வயதுடைய இராஜகுரு என்பவரே அவரது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு 11.00 மணி வரை திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், பின்னர் தாம் நித்திரைக்கு சென்றபின்னர் இவர் வீட்டு வாசலில் இருந்ததாகவும் அதிகாலை இவரைக் காணாது தேடிய போது மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் வீட்டிலுள்ளோர் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka