சுகாதாரப்பணி உதவியாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனம் வழங்கினார்.

சுகாதாரப்பணி உதவியாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனம் வழங்கினார்.

யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சுகாதாரப்பணி உதவியாளர்களாக (உளநலம்) தெரிவுசெய்யப்பட்டோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்.
 
இன்றுமாலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் தொண்டர்களாக பணிபுரிந்தோருக்கே இந்நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
ஏற்கனவே அமைச்சரவர்களைச் சந்தித்து தமக்கு நிரந்தர நியமனத்தினைப் பெற்றுத்தருமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
நியமனம் பெற்றுக்கொண்டோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் வேலணை பிரதேச வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்ற உள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
 
இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ். உள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சா.சிவயோகன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைப்பாளர் கோ.கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka