சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரகடனத்தில் இணைந்தது இலங்கை

உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய கொள்கை பிரகடனத்தில் இலங்கை இணைந்து கொண்டுள்ளது.

இதற்கான கொள்கை பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளினால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எமது பிள்ளைகளை பாதுகாப்பதற்கான உறுதியை புதுப்பிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கொள்கை பிரகடனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka