கூடங்குளம் கலவரம் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு கடற்தொழிலாளி பலி!

கூடங்குளம் அணுமின்நிலைய மக்கள் போராட்டம் தீபற்றி எரிகின்றது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தூத்துக்குடியில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகம் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் எதிர்ப்புப் போராட்டக்காரர்களை இன்று காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் மக்களை கலைத்தனர். பதிலுக்கு மக்களும் தாக்குதலில் இறங்கியுள்ளதுடன் மக்கள் கலவரமாக மாறியது கூடங்குளம் இடிந்தக்கரை மக்கள் இடைவிடாது தொடரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு குளந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலோர பகுதி மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் தூத்துக்குடிப்பகுதியில் புகையிரத மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள் கோவையில் மாணவர்கள் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கதொடங்கியுள்ளது அத்துடன் தமிழக முதல்வரின் இல்லம் முற்றுகை இடமுயன்ற மே17 இயக்கதலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலிதாவின் இல்லத்தினை முற்றுகை இடமுயன்ற வேளை மே17இயக்க தலைவர் திருமுருகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அறவளித்தொடர் போராட்டங்கள்மேற்கொள்ளவுள்ளதாகவும் கூடங்குளம் அணுஉலை அகற்றும் வரை பேராட்டம் தொடரும் என்றும் போராட்ட குழு அறிவித்துள்ளது.


இதேவேளை தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பலர் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள் தமிழக அரசின் அடக்குமுறைக்குள் மக்கள் வதைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதனிடையே மக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு மென்மையான போக்கினை தாம் கடைப்பிடித்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் அவசர கூட்டம் ஒன்றினை கூட்டி சில முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்தக்கரை கிராமத்தினை தற்போது காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கூடங்குளம் பகுதியின் பாதுகாப்பிற்காக ஜந்தாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன மக்களின் போராட்டங்களை அடக்குமுறைக்கு கொண்டுவருவதற்கு போதியளவு காவல்துறையினர் இல்லை என செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.


துத்துக்குடியில் காவல்துறையினரின் அடக்குமுறை துப்பாக்கி பிரயோகத்தில் 45 அகவையுடைய அந்தோனிறாஜா என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது
போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.


இடிந்தக்கரையில் ஒர் பிரச்சனை ஏற்பட்டால் அது கடலோரம் முழுதும் பற்றி எரியும் என்றும் கடற்கரைஓர 10ற்கு மேற்பட்ட கிராமங்களில் தொடரும் என்றும் மக்கள் உணர்வுகள் தெரிவிக்கின்றன.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka