கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் அறிவித்தல்

மக்களுக்குக் கேடான கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டுகாலமாக மாபெரும் மக்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் அறவழியில் நடந்து வந்தது. மக்கள் கருத்தைப் பொருட்படுத்தாமல், அடக்குமுறையின் மீது நம்பிக்கை வைத்து, மத்திய மாநில அரசுகள் அலட்சியம் செடீநுது எரிபொருள் நிரப்பநாள் குறித்தனர்.

இந்நிலையில் அறவழியில் முற்றுகைப் போராட்டம் நடத்திட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் நோக்கி நேற்று (9.9.2012) புறப்பட்டனர். அவர்களைத் துணைராணுவத்தினரும் தமிழகக் காவல்துறையினரும் தடுத்து மறித்தனர். அவர்கள் மறித்த இடத்தில் அமர்ந்து முழக்கம் எழுப்பி கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர் மக்கள்.

அம்மக்களை இன்று (10.9.2012) துணை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தடியால் அடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திக் கலைத்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில் ஒரு குழந்தையும், அந்தோனி என்பவரும் இறந்துள்ளனர். பலர் படுகாயமுற்றனர். உயிர் தப்பிக்கக் கடலில் இறங்கிய மக்களை அங்கும் துணை இராணுவத்தினரும், காவல்துறையினரும் விரட்டியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் காவல்துறையின் வேட்டை நடந்து கொண்டுள்ளது. இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடக்குமோ என்ற பீதி மக்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கண்டித்தும், துணை ராணுவத்தினரையும், காவல்துறையினரையும் அப்பகுதியில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தியும் 11.9.2012 காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் 11.9.2012 காலை 9 மணிக்கு அண்ணாசாலையில், அண்ணாசிலை அருகே மறியல் போராட்டம் நடக்க உள்ளது. கீடிநக்காணும் அமைப்புகளும், ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள உள்ளன.

ஒருங்கிணைப்பாளர்

திராவிடர் விடுதலைக் கழகம் - கொளத்தூர் மணி
தமிடிநத் தேச பொதுவுடைமைக் கட்சி - பெ.மணியரசன்
தமிழக வாடிநவுரிமைக் கட்சி - தி.வேல்முருகன்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - மல்லை சத்யா
தமிழர் முன்னேற்றக் கழகம் - க.அதியமான்
தமினைக் காப்பாற்று இயக்கம் - தி.செந்தில்
மே 17 இயக்கம் - உமர்
காஞ்சி மக்கள் மன்றம் - மகேஸ்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் - ஏ.கேசவன்
தமிடிநநாடு மக்கள் கட்சி - அருண்ஷோரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.வெ) மக்கள் விடுதலை - சிதம்பரநாதன்
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் - ஜவகர்
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி - ஜெகன்
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் - பாவேந்தன்
தமிடிநநாடு பெண்கள் இணைப்புக் குழு - ஷீலு
தமிடிந தேசிய இயக்கம் விடுதலை இயக்கம் - குமரேசன்

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka