கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் மரணம்

கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் மரணம்

யாழ். கச்சேரி நல்லூர் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்

சின்னத்தம்பி யோகேஸ்வரி (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கிணற்றிலிருந்து மீட்டு எடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்முதியவரின் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka