கழிவு ஒயில் ஊற்றி சுன்னாகம் பிரதேசசபை புதியகட்டிடத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. (படங்கள் இணைப்பு)

புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திறக்கப்பட இருந்த சுன்னாகம் பிரதேசசபைக் கட்டிடத்திற்கு அதிகாலை 2.30 மணியளவில் விஷமிகளால் கழிவு ஒயில் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த திறப்பு விழாவினை யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமானவரை அழைக்காது சாதாரணமாக பொதுமக்களுடன் சேர்ந்து திறப்பதற்கு திட்டமிட்டதே இந்த கழிவு ஒயில் ஊற்றப்பட்டதற்கு காரணம் என சுன்னாகம் பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது கழிவு ஒயில் கழுவும் நடவடிக்கை மும்முரமாக நடைபெறுவதாகவும் நிச்சயம் இன்று கட்டடத் திறப்புவிழா நடைபெறும் எனவும் பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka