இராணுவ குறைப்பு, வடபகுதி மக்களுக்கான அரசின் சேவைகள் குறித்து யாழ். ஆயரிடம் அமெரிக்க இராஜதந்திர குழுவினர் கேள்வி

யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்காவிற்கான உதவித்தூதுவர் வில்லியமஸ் வின்ரைனஸ் தலைமையிலான குழுவினர், யாழ். ஆயரை, ஆயர் இல்லத்தில் சந்தித்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, யாழ். மாவட்த்தில் இராணுவக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இந்த இராணுவக்குறைப்பு மக்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா? அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதாக தெரிவித்து வருகின்றது. ஆனால் மக்களிடம் கேட்டால் மக்கள் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இதில் யார் சொல்வதை ஏற்றுக்கொள்வது என்று யாழ் ஆயரிடம் அமெரிக்க குழுவினார் கேள்வி எழுப்பினர்.

இந்த விடயங்கள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்த ஆயர்,

'அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு திருப்திகரமாக எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இரக்கின்றது. இதன் காரணமாக அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பின்னடித்து வருகின்றது.

போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டு மூன்று வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க அரசு தயாராக இல்லை. அத்துடன் இராணுவக்குறைப்பு என்பது பெயரளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்று. இதில் தமிழ் மக்கள் திருப்திப்படும்படியாக ஒன்றும் இல்லை.

நல்லிணக்கான ஆணைக்குழு என்பது ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஒரு குழு. அது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக்கொண்டு உருவாக்கப்படவில்லை. இருந்தாலும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் இயன்றளவு நடைமுறைப்படுத்தினால்கூட தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகித்தது போல இலங்கையில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கும் இவ்வாறானதொரு மத்தியஸ்த்தை ஏற்படுத்தலாம்' என்று ஆயர் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka