ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற மீனவர்கள் அறுவரை காணவில்லை

நீர்கொழும்பிலிருந்து சுமார் ஒருமாதத்திற்குமுன்  ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்கள் அறுவர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மீனவர்கள் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து  ஜூலை 20 ஆம் திகதி புறப்பட்டனர். மடு திருவிழாவுக்குச் செல்வதற்காக தாம் நீர்கொழும்புக்கு  திரும்பி வரவுள்ளதாக குடும்ப அங்கத்தவர்களுக்கு ஓகஸ்ட் 10 ஆம் திகதி அவர்கள் அறிவித்தனர். எனினும் அவர்கள் இன்னும் திரும்பவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடலுக்குப் புறப்பட்டவேளையில் அவர்களின் படகில் 5000 லீற்றர் டீசல், 250 தொன் ஐஸ், மற்றும் தண்ணீர், உணவுப்பொருட்கள் இருந்தன.

ச.ஜகத், ருவன் இஷாங்க, நிலங்க, அனில் பிரியங்கர, திலிப் பிரியங்கர, ஜூட் தடேவ்ஸ் ஆகியோரே மேற்படி 6 மீனவர்களாவர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு குடும்ப அங்கத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
இம்மீன்பிடி படகு குறித்து, ஆழ்கடல் மீன்பிடிக்கு  றோலர் படகில் செல்பவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போன மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka