அம்மாவை காணவில்லை! பிள்ளைகள் கண்ணீர்: இராணுவச் சிப்யாயுடன் சென்று வந்தாராம் தாயார்

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாய்ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் கூட்டிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனித்துவிடப்பட்ட தாம் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரிய முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்வம் பற்றி தெரியவருவதாவது,

குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளளார்.அப்போது இரணைமடு குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார்.ஆனால் காதலை நிறுத்தவில்லை.

சம்பவம் குறித்து கைவிடப்பட்ட பிள்ளைகள் தெரிவிக்கையில்,

அந்த ஆமிக்காரன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போவான்.நாங்கள் சின்னபிள்ளைகள். எங்களுக்கு அப்பா இல்லை.அவர் வன்னி போரில் காணாமற்போய்விட்டார்.எங்களுக்கு உதவிக்கு யாருமில்லை. அம்மா கூலிவேலை செய்துதான் எங்களை பார்க்கிறா. நாங்கள் ஐந்து பேர் கடைசி தம்பிக்கு ஒன்றரை வயது.

அந்த ஆமிகாரன் தான் அம்மாவை திருமணம் முடிப்பாதாகக் கூறி வீட்டுக்கு வந்து போவான்.அம்மா இதை எங்களிடம் சொல்லுவா.இப்படித்தான் கடந்த 25 ஆம் திகதி விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி நின்றுவிட்டு மறுநாள் அவர் அம்மாவை கூட்டிச் சென்றுவிட்டார்.

28 ஆம் திகதி அம்மா எங்களுக்கு ஹோல் எடுத்தவா. தன்னை குறித்த படைச்சிப்பாயும்வேறு சிலரும் கடுமையாகத் தாக்கி தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்.பின்னர் அந்த நம்பர் வேலைசெய்யவில்லை. இவை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது அம்மா இருக்கும் இடம் எங்கே?இவரை கூட்டிவாருங்கள் முறைப்பாடு பதிவுசெய்கிறோம் எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்-இவ்வாறு தாயாரால் பரிதவிக்கவிடப்பட்ட பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதேவேளை,நேற்று மாலை வீடுதிரும்பிய தாயார் தான் மைத்துனர் வீட்டுக்கு சென்று வந்ததாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் இவ்வாறு கூறுகின்றனர் என்று கேட்டபோது, தான் குறித்த சிப்பாயுடன் விரும்பியே சென்றதாகவும்,அடையாளஅட்டை கொண்டு செல்லாததால் ஓமந்தையில் இராணுவத்தினர் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தொடர்பற்ற விதத்தில் தெரிவித்தார்.

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka